

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் வீரர்கள் 5 பேரும் வீரமரணம் அடைந் தனர்.
வடக்கு காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ளகெரன் செக்டாரில் தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை திரும்பிச் செல்லுமாறு ராணுவத்தினர் எச்சரித்தனர்.
அதை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராணு வத்தினரும் பதிலடி கொடுத்தனர். பல மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இந்த சண்டையில் 5 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். தீவிர வாதிகளுடன் நடந்த மோதலில் ராணு வீரர்கள் 5 பேரும் வீரமரணம் அடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டை
மேலும், சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக காயமடைந்தவர்களை அப்புறப்படுத்துவதில் சிரமம் உள்ளதாகவும், மேலும், தீவிர வாதிகள் யாராவது பதுங்கி உள்ளார்களா என்று தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறினர்.