

நாட்டின் 15-வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் பல ஒற்றுமை கள் உள்ளன.
இருவருமே மாற்றம் மற்றும் நம்பிக்கை என்ற கோஷங்களை மக்களிடையே முன்வைத்து ஆட்சி யைப் பிடித்துள்ளனர். சமூக தளங்களில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்களாக இவர்களிரு வரும் விளங்குகின்றனர்.
63 வயதாகும் மோடி நாட்டின் 15-வது பிரதமராகப் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார். இவர் அனைத்து தொழில்நுட்பம் மற் றும் சமூக வலைதளங்களை தனது பிரசாரத்துக்கு பயன்படுத் திக் கொண்டுள்ளார். இதே பாணி யைத்தான் ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியிருந் ததார்.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டின் போன்றவற்றில் மோடி மற்றும் ஒபாமா ஆகிய இருவருமே மிகவும் பிரபலமானவர்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்வதேச அளவில் மிகவும் விரும்பப் பட்ட அரசியல் தலைவர்களில் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் மோடி. இதேபோல ட்விட்டரில் ஒபாமாவைத் தொடரும் ரசிகர்களைப் போல மோடியைத் தொடருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பதவியேற்கும் தினத்தன்று காலையில் மகாத்மா காந்தியின் சமாதி உள்ள ராஜ்காட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார் மோடி. இதேபோல ஒபாமாவும் மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளர்.
வெள்ளை மாளிகையில் உள்ள ஒபாமாவின் ஓவல் அலுவலகத்தில் சிறிய காந்தியடிகளின் மார்பளவு சிலை உள்ளது.
52 வயதான ஒபாமா மாறி வரும் தகவல் தொழில்நுட்ப நுணுக் கங்களை தொடர்ந்து பின்பற்றி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டுபவர். இப்பூவுலகில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பேரழிவையும் சுட்டிக் காட்டத் தவறாதவர்.
புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நோக்கில் 2009-ம் ஆண்டிலேயே சூரிய மின்னாற்றல் திட்டத்தை செயல்படுத்தியவர் மோடி.
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான சாலை, பாலம், துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை மேம் படுத்துவதில் ஆர்வம் காட்டியவர் ஒபாமா. இதேபோல மோடியும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி கள் மேம்படுத்தப்படும் என உறுதி கூறியுள்ளார்.
ஒபாமாவைப் போன்றே மோடியும் வெளிப்படையான அரசு நிர்வாகம் அமையும் என குறிப்பிட்டுள்ளார். தனது அரசின் அனைத்து செயல்பாடுகளும் ஒளிவு மறைவின்றி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இணையதளத்தில் அரசின் அனைத்து செலவினங்களையும் பட்டியலிட்டுள்ளார் ஒபாமா.
மோடியும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப் படையான அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தப் போவதாக உறுதியளித் துள்ளார். இதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் மோடி.
மே 16-ம் தேதி வெற்றி பெற்ற மோடி மிகவும் குறைந்த அளவிலான அமைச்சர்களைக் கொண்டு வலு வான அமைச்சரவையை ஏற்படுத்தி யுள்ளார்.
2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ஒபாமா, அமெரிக்க அரசின் செயல்பாடுகளில் பெருமளவு மாற்றம் கொண்டு வந்தார். பல துறைகளில் பெருமளவு ஆள்குறைப்பு செய்தார்.
வெளிநாட்டு தூதர்கள் நாட்டின் தலைமைச் செயல் அதிகாரிகள் போல செயல்பட்டு அந்நிய நேரடி முதலீடுகளை நாட்டுக்கு ஈட்டித் தர வேண்டும் என்று ஒபாமா கூறினார்.
அதேபோல மோடியும் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட் டின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டுத் தூதர்கள் சிறப்பாக பங்காற்ற முடியும் என்று கூறியுள் ளார்.
அதேபோல நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மோடி.