

நாடுமுழுவதும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரமடைந்துள்ளதால் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் நடைபெற இருந்த அனைத்து பயிற்சி முகாம்களும் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடுமுழுவதும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரமடைந்துள்ளதால் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் நடைபெற இருந்த அனைத்து பயிற்சி முகாம்களும் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.
ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை 3 மாதங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தனது ஊழியர்கள், தொண்டர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது வழக்கம்.
கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து பணிகளையும் ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான பயிற்சி முகாம்களும் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.