Published : 06 Apr 2020 03:59 PM
Last Updated : 06 Apr 2020 03:59 PM

நியூயார்க்கில் புலிக்கு கரோனா தொற்று எதிரொலி: இந்தியாவிலும் உயிரியல் பூங்காவில் கண்காணிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

நியூயார்க் பூங்கா புலிக்கு கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக விலங்குகளுக்கும் கரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்று இந்திய உயிரியல் பூங்கா ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் உருவாகி உலகமெங்கும் கிட்டத்தட்ட 200 நாடுகளிலும் பரவி மாபெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கரோனா இப்போது விலங்குகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் புலி ஒன்றிற்கு கோவிட் 19 நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் உயிரியல் பூங்காக்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை வனவிலங்கு வார்டன்களுக்கு திங்களன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் பொறுப்பான அதிகாரிகளுக்கும் மத்திய வன உயிரியல் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் சி.ஜே.ஏ எஸ்.பி. யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

எனவே, நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விலங்குகளை 24x7 நேர அடிப்படையில் பார்க்கவும் அறிவுறுத்தப்படுகின்றன,

எந்தவொரு நோய் அறிகுறி உள்ள விலங்குகளையும் சி.சி.டி.வி உட்பட, பாதுகாப்புக் கருவி இல்லாமல், அருகிலுள்ள பராமரிப்பாளர்கள் விலங்குகளைக் கையாள அனுமதிக்கப்படக்கூடாது, பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு விலங்குகளைக் கையாள வேண்டும், நோயுற்ற விலங்குகளை தனிமைப்படுத்துதல் வேண்டும். விலங்குகளுக்கு உணவளிக்கும் போது குறைந்த பட்ச இடைவெளி கடைபிடிக்கவேண்டும்.

மாமிச பட்சினிகள், குறிப்பாக பூனை மற்றும் பூனை வகை விலங்குகள் மற்றும் பெஃர்ரட்ஸ் போன்ற விலங்கினங்கள் அவற்றுடன் உள்ள மற்ற விலங்குகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்த அதிக ஆபத்துள்ள நோய்க்கிருமியைக் கையாள தேவையான உயிர் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி விலங்குகளிடம் நோய்க்குறி தென்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய விலங்குகளின் ரத்த மாதிரிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை கோவிட் 19 பரிசோதனையைத் தொடங்க நியமிக்கப்பட்ட விலங்கு சுகாதார நிறுவனங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அனைத்து உயிரியல் பூங்கா ஊழியர்களும் கரோனா வைரஸ் நோய் (கோவிட் 19) குறித்து அவ்வப்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கிருமிநாசினி நெறிமுறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.''

இவ்வாறு இந்தியாவில் உள்ள தேசிய விலங்குகள் பூங்கா அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x