பாலிசிதாரர்களுக்கு புதிய சலுகை: ஐஆர்டிஏ அறிவிப்பு 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வாழ்நாள் காப்பீடு, மருத்துவக்காப்பீடு, வாகனக்காப்பீடு வைத்திருப்பவர்கள் மார்ச், ஏப்ரல் மாதம் ப்ரீமியம் தொகை செலுத்த கூடுதலாக 30 நாட்கள் வழங்கி இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம்(ஐஆர்டிஏ) அறிவித்துள்ளது.

காப்பீடு தாரர்கள் பாலிசியைப் புதுப்பிக்கும் காலம் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வந்தாலும் கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இது மோட்டார் வாகனத்தில் 3-வது நபர் பாலிசி, மருத்துவக்காப்பீடு, ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊடரங்கு பிறப்பித்துள்ளதால் பாலிசி ப்ரீமியம் செலுத்துவதிலும், பாலிசியை புதுப்பிப்பதிலும் பல்வேறு சிரமங்களை வாடிக்கையாளர்கள் சந்திக்கக்கூடும் என்பதால் இந்தசலுகையை ஐஆர்டிஏ வழங்கியுள்ளது

அதேசமயம் மே 31-ம் தேதிவரை பாலிசிக்கள் முதிர்ச்சி அடைந்தால், அதற்குரிய பணம் முழுமையாக பாலிசிதாரருக்கு வழங்கப்படும். சில குறி்ப்பிட்ட விதிமுறைகளுடன் செட்டில்மென்ட் வாய்ப்பும் வழங்கப்படும்.

கடந்தவாரம் ஐஆர்டிஐ வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீட்டின் 3-வது நபருக்கான ப்ரீமியம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதிவரை இருந்தால், ஏப்ரல் 21-ம் தேதிக்குள்ளாக செலுத்தலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

மாதவாரியாக ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசமும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்வோருக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in