

மத்தியப் பிரதேச உஜ்ஜயினி மாவட்டத்தில் 55 வயது பெண்மணி ஒருவர் தனியார் மருத்துவமனையின் ஐசியூ பிரிவு பூட்டப்பட்டு மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லாததால் உரிய நேரத்தில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
55 வயது பெண் நோயாளிக்கு கடும் சுவாசப்பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனையடுத்து உஜ்ஜயின் மாவட்ட அரசு மருத்துவமனையில் வியாழன் இரவு அனுமதிக்கப்பட்டார். ஆனால் இங்கு இவரது உடல் நலம் மோசமடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டதால் ஆர்.டி. கார்டி மருத்துவக் கல்லூரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் நுழைந்தது. நோயாளி ஆம்புலன்ஸிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு அதிர்ச்சிக் காத்திருந்தது ஐசியு பூட்டப்பட்டு மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லாமல் இருந்தது.
அவசர சிகிச்சைக்காக பூட்டை உடைத்துத் திறக்க முடிவெடுக்கப்பட்டது. தாமதமாக தாமதமாக நோயாளியின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கொண்டு சென்று மருத்துவர்கள் அவர் உயிரைக் காப்பாற்ற போராடியும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாக்டர் ஆர்பி. பார்மர், டாக்டர் மகேஷ் மர்மத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நோயாளிக்கு வென் ட்டிலேட்டர் அளிக்கத்தவறியதால் இவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது, இவர் மட்டுமல்ல இன்னொருவருக்கும் வெண்ட்டிலேட்டர் தராமல் போனதால் அவரது உயிரும் பிரிந்துள்ளது.
இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.