Last Updated : 05 Apr, 2020 02:36 PM

 

Published : 05 Apr 2020 02:36 PM
Last Updated : 05 Apr 2020 02:36 PM

கரோனாவை அறிய அதிவிரைவு நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனையை பரவலாக நடத்துங்கள்: மத்திய அரசுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை 

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவல் குறித்து அறிவதற்கு மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் மக்களுக்கு அதிவிரைவு நோய்எதிர்ப்பு சக்தி பரிசோதனையை பரவலாக நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது

நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ள அபாய இடங்களை ஹாட் ஸ்பாட்கள் என்று கருதுகின்றனர், இந்த இடங்களில் இம்யூனோகுளோபுலின்ஸ் என்று அழைக்கப்படும் அதிவிரைவு நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனையை (ரேபிட்ஆன்ட்டிபாடி டெஸ்ட்) நடத்தலாம் என இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரை செய்தது.

ஆன்ட்டி பாடிஸ் அல்லது இம்யூனோகுளோபுலின்கள் என்பது Y வடிவ புரோட்டீன்கள் ஆகும். இது வைரஸ் அல்லது பாக்டீரியாவின் மேற்பரப்பில் ஒட்டும் தன்மை கொண்டது. இது ரத்தம் அல்லது உடலின் பிற திரவங்களில் உள்ளது. இதுதான் வெளியிலிருந்து வரும் வஸ்த்துக்களைத் தடுக்கும் உடலின் எதிர்ப்பாற்றல் சக்தியாகும். இந்த பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை ஓரளவுக்கு அறிய முடியும்.

ரத்தப்பரிசோதனை செய்யப்படுவதைப் போலவே நோய் எதிர்ப்பு சக்தி ரத்தப் பரிசோதனையும் நடத்தப்படும் இதன் முடிவுகள் 15 முதல் 30 நிமிடங்களில் தெரிந்துவிடும்..

இந்த சோதனையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராயாச்சிக் கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீத்தி சுதனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

“ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்துவதன் மூலம் கோவிட்-19 முழுமைாக பரிசோதனை செய்யலாம். அடுத்து வரும் காலங்களில் முழுமையான திறனை நம்மாம் எட்ட முடியும். அதே நேரத்தில் கோவிட்-19 பரிசோதனைக்கு அதிவிரைவு ரத்தப் பரிசோதனை கருவிகளை விரைவாக அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த விரைவான ரத்தப் பரிசோதனைக் கருவிகளின் பயன்பாட்டைக் கண்டறிவதற்காக தேசிய தடுப்புப்படை வல்லுநர்களுடன் கலந்துரையாடியதுடன், பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையின் வரைவும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மக்கள் அதிகமாக புலம்பெயரும் இடங்கள், கரோனா வைரஸ் அதிகமாகப் பரவிய இடங்கள் ஆகியவை குறித்து எங்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளோம். அந்த இடங்களில் அதிவிரைவு நோய்எதிர்ப்பு ரத்தப்பரிசோதனையை தொடக்கலாம்.

அதேநேரத்தில் இந்த அதிவிரைவு நோய் எதிர்ப்பு ரத்தப் பரிசோதனையை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரிவாக நடத்துவதற்கு செயல்பாட்டு விதிமுறைகள், அதை நடைமுறைப்படுத்துவது,மாநில அரசுகளின் பங்கு, பொறுப்புகளையும் தெரிவிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் முடிவுகளைப் போன்றே ஐசிஎம்ஆர் போர்டலில் இந்த பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கப்படும்.

அதேசமயம் இன்ப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல் இருந்தால் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்படும். மேலும், பாதிப்ப இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அது மருத்துவ அதிகாரியின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்படும்.

அதிகமான முன்னெச்சரிக்கையாக, இன்புளூயன்ஸா போன்ற அனைத்து அறிகுறிகள் இரும்க்கும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலாம். வசதிகளின் அடிப்படையில் இன்புளூயன்ஸா காய்ச்சல் மட்டும் இருந்தால் அவர்களுக்கு அதிவிரைவு நோய் எதிர்ப்பு ரத்தப்பரிசோதனயும் நடத்தலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி ரத்தப்பரிசோதனை நெகட்டிவாக இருந்தால், ரியல் டைம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் தொண்டைச்சளி மூலம் பரிசோதனை செய்து கரோனாவை உறுதிப்படுத்தலாம்

இப்போதுள்ள நிலையில் சந்தேகிக்கப்படும் நபர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா எனக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைதான் நடத்தப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு முடிவுகள் நெகடிவாக வந்தால் அவருக்கு கரோனா அடிப்படையிலான காய்ச்சல் இல்லை என்றும், அதுவே பாஸிட்டிவ்வாக இருந்தா், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தி அவரை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்”

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x