மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா;புதிதாக 26 பேருக்கு பாதிப்பு 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டிலேயே கரோனா வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இன்று புதிதாக 26 பேருக்கு கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணி்க்கை 661 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 661 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 17 பேர் புனே பகுதியைச் சேர்ந்தவர்கள், 4 பேர் அதன் புறநகர் பகுதியான பிம்ரி சின்சாவத் பகுதியையும், அகமதுநகரைச் சேர்ந்தவர்கள் 3 ேபரும், அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள் 2 ேபரும் அடங்குவர்.

இதுவரை மாநிலத்தில் 32 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர், 52 பேர் கரோனா வைரஸலிருந்து மீண்டுள்ளார்கள்.

மும்பையில் மட்டும் 22 பேர் இதுவரை இறந்துள்ளார்கள். மும்பையில் மட்டும் 96 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். தாராவி பகுதியில் கூடுதலாக 3 பேருக்கும், வோர்லி பகுதியில் 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மும்பையில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன “ எனத் தெரிவிக்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in