

அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அசாமில், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேருடன் தொடர்புடைய 42 பேர்,குவாஹாட்டிக்கு அருகிலுள்ளகோலாகாட் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர். அந்த 8 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த முஸ்லிம்மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அமைச்சர் ஹிமந்தா வருவதாக இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் எச்சில் துப்பினர்.
மேலும் ஜன்னல் வழியாகவும் எச்சிலைத் துப்பினர். எச்சில் மூலம் நோய் பரவும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த டாக்டர்கள், செவிலியர்கள் மீதும் அவர்கள் எச்சில் துப்பினர்.
இதுகுறித்து அமைச்சர் ஹிமந்தா கூறும்போது, “இங்கு தனிமை வார்டில் வைக்கப்பட்ட 42பேரும் தங்களுக்கு நோய் இல்லை என்று நம்புகின்றனர். ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளோம்.
இப்படி துப்பினால் மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்பதைஅவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வீட்டைச் சேர்ந்தபெரியவர்கள் இதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும். அவர்கள் எச்சில் துப்புவதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.