Published : 04 Apr 2020 02:57 PM
Last Updated : 04 Apr 2020 02:57 PM

ஏழ்மையும் கருணையும்: கரோனா லாக்-டவுன் காலத்தில் மக்களுக்கு இலவசமாக ஓட்டும் மனிதாபிமான ரிக்‌ஷாக்காரர்

ரிக்‌ஷா ஓட்டுநர் உத்தம் குமார் சிங்.

புதுடெல்லி

கரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் கஷ்டம்தான் என்றாலும் ஏழைகள், தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர், இதில் பாதிப்பு குறித்த கவலையின்றி பிறருக்கு உதவும் உள்ளம் படைத்த ஏழை ரிக்‌ஷா ஓட்டி ஒருவர் டெல்லியில் பலரது கவனத்தையும் ஈர்த்து ஏழ்மைக்கும், கருணைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நிரூபித்தார்.

டெல்லியில் மோட்டி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் பையைத் தூக்க முடியாமல் தூக்கிச் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் ரிக்‌ஷாவில் ஏறுங்கள் கொண்டு விடுகிறேன் என்றார், ஆனால் அந்தப் பெண்மணி காசில்லை என்று கூற காசு வேண்டாம் ஏறுங்கள் என்று கூறி வீட்டில் விட்டுள்ளார்.

இந்தப் பெண்மணி மருத்துவமனையிலிருந்து தன் ரகுவீர் நகர் இல்லத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த ரிக்‌ஷா ஓட்டுநர் பெயர் உத்தம் குமார் சிங். வீட்டில் இறக்கி விட்டதோடு ரிக்‌ஷாக்காரர் சிங் அந்தப் பெண்ணுக்குக் குடிக்க குடிநீரையும் அளித்தார்.

இது குறித்து அந்த ரிக்‌ஷாக்காரர் உத்தம் குமார் சிங் லாக்-டவுன் என்பதால் ஒரு சில ரிக்‌ஷாக்களே சாலையில் இருக்கின்றன. 1-2 கிமீ தாண்டி செல்ல முடியாது தாண்டிச் சென்றால் போலீஸார் லத்தியை உயர்த்துகின்றனர் என்றார்.

இந்த ரிக்‌ஷாக்காரர் தன் குடும்பத்தில் 7 பேருக்காக சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். நாளொன்றுக்கு ரூ.100 சம்பாதிப்பேன் என்று கூறும் உத்தம் குமார் சிங், இந்தக் கஷ்ட காலங்களில் இல்லாத மக்களிடம் காசுவாங்குவதில்லை என்றார்.

ரிக்‌ஷாவை வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர்களுக்கு ரிக்‌ஷா உரிமையாளர்கள் லாக்-டவுன் காலத்தில் வாடகை வேண்டாம் என்று சலுகை அளித்திருப்பதாக கூறுகிறார் உத்தம் சிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x