Published : 04 Apr 2020 10:09 AM
Last Updated : 04 Apr 2020 10:09 AM

கரோனா வைரஸ் அதிபாதிப்பு; விரைவு கதியில் நோய் எதிர்ப்பாற்றல் டெஸ்ட்: ஐசிஎம்ஆர் பரிந்துரை

இந்தியாவில் கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 வைரஸின் பரவல் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 62 பேர் கொரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். 162 நோயாளிகள் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுதும் இதுவரை 66,000 சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. இதில் மீண்டும் சோதிக்கப்பட்ட சாம்பிகள்களும் அடங்கும். மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 16 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் 8, தெலங்கானாவில் 7, ம.பி.யி. 6, பஞ்சாபில் 5, டெல்லியில் 4, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் முறையே 3 பேர், ஜம்மு காஷ்மீர், உ.பி. , கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் இறந்துள்ளனர்.

“இந்தியா தனது முன் கூட்டிய நடவடிக்கைகளால் கரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சம்பவம் (தப்லிக்) கேஸ்கள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளன. 2 நாட்களில் 647 கரோனா தொற்றுக்கள் தப்லிக் ஜமாத் வழிபாட்டுக் கூட்டத்துடன் தொடர்புடையது. இது தொடர்பான தொற்றுக்கள் 14 மாநிலங்களில் பரவியுள்ளது. சில மரணங்களும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது” என்று மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலர் லாவ் அகர்வால்” செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விரைவு ஆன்ட்டிபாடி டெஸ்ட் - ஐசிஎம்ஆர் பரிந்துரை

நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ள அபாய இடங்களை ஹாட்ஸ்பாட்கள் என்று கருதுகின்றனர், இந்த இடங்களில் இம்யூனோகுளோபுலின்ஸ் என்று அழைக்கப்படும் ஆன்ட்டிபாடி டெஸ்ட்களை நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. ஆன்ட்டி பாடிஸ் அல்லது இம்யூனோகுளோபுலின்கள் என்பது Y வடிவ புரோட்டீன்கள் ஆகும். இது வைரஸ் அல்லது பாக்டீரியாவின் மேற்பரப்பில் ஒட்டும் தன்மை கொண்டது. இது ரத்தம் அல்லது உடலின் பிற திரவங்களில் உள்ளது. இதுதான் வெளியிலிருந்து வரும் வஸ்த்துக்களைத் தடுக்கும் உடலின் எதிர்ப்பாற்றல் சக்தியாகும்.

இந்த டெஸ்ட்டை நடத்ததான் ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x