Last Updated : 03 Apr, 2020 04:06 PM

 

Published : 03 Apr 2020 04:06 PM
Last Updated : 03 Apr 2020 04:06 PM

உ.பி.யில் கரோனா பயம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட  சோகம்: சோதனையில் கரோனா இல்லை எனத் தெரிந்தது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று ஐயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டார், ஆனால் அவரது சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதில் கரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக மக்களனைவரையும் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரிதும் பாதித்து வருகிறது.

கரோனா வைரஸ் சிகிச்சை முறை, தனிமைப்படுத்துதல் போன்ற செய்திகள், விவரங்கள், பிம்பங்கள் பாதிக்கப்படுபவர்களையும் சரி, பாதிக்கபடாதவர்களையும் சரி ஒருசேர அச்சுறுத்துகிறது.

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தைரியம் அளிக்கும் விதமாக, அதாவது கரோனா தொற்றினாலும் பயப்பட ஒன்றுமில்லை, 80% நோயாளிகளுக்கு தானாகவே சரியாகி விடுகிறது என்பது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சிகிச்சை முடிந்து குணமானவர்களைக் கொண்டு தைரியமும் அளிக்க வேண்டும். ஏற்கெனவே உடல் உபாதைகள் உள்ளவர்களுக்குத்தான், குறிப்பாக 65 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் முந்தைய தீவிர நோய் உள்ளவர்களுக்குத்தான் சிக்கல்கள் அதிகம் என்று அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உத்தரப் பிரதேச ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் எழுந்தன.

ஆனால் இவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த போது அவருக்குக் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால் என்ன பயன், அவர் தன் உயிரை பயத்தினால் மாய்த்துக் கொண்டு விட்டார்.

தற்கொலை செய்து கொண்ட இந்த நபர் 40 வயதே ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாம்பிள்கள் மீரட் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது, அதில் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குக் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. என்று தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

இவர் செவ்வாயன்று ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இவர் புதன் இரவு தூக்கு மாட்டி இறந்துள்ளார். இவரது இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், கரோனா பீதியாகவே இருக்கலாம் என்று போலீஸார் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x