Last Updated : 29 Aug, 2015 12:25 PM

 

Published : 29 Aug 2015 12:25 PM
Last Updated : 29 Aug 2015 12:25 PM

காஷ்மீர் ராணுவ முகாமில் வெடிவிபத்து: 12 வீரர்கள் காயம்

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா ராணுவ முகாமில் இன்று (சனிக்கிழமை) காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் காயமடைந்தனர். இவர்களுள் 7 பேர் மோசமான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெடிகுண்டுகளை வைத்து மேற்கொண்ட பயிற்சியின்போது நடந்த எதிர்பாராத விபத்து இது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விபத்துக்கான காரணம் குறித்த உடனடியாக முடிவுக்கு வரமுடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x