டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.
Updated on
1 min read

டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர் ஒருவருக்கு கோவிட் -19 வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கரோனா நோய்த் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டதாக ஜனவரி 30-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இது சீனாவின் வூஹானில் இருந்து பயணம் செய்து திரும்பியவருக்கு ஏற்பட்ட தொற்றாகும்.

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் 1,965 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணக்கை 41 லிருந்து 50 ஆக அதிகரித்தள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனினும் அவரது விவரங்களை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிடவில்லை.

இதுகுறித்து எய்ம்ஸ் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ள மருத்துவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து பணியாற்றி வருபவர். அவர் உடலியல் துறையில் பணியமர்த்தப்பட்டவர். மேலும், மதிப்பீடு செய்வதற்காக தனியாருக்கான புதிய வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

கரோனா பரிசோதனையில் மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடமறிதல் நெறிமுறை தொடங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in