

இந்தியாவில் கரோனா தொற்று பரவிவருவதையடுத்து 21 நாட்கள் லாக்-டவுன் அமலில் உள்ளது, இதனை பலரும் கடைபிடிக்காமல் சாலைகளில் சுற்றித்திரியும் பழக்கம் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலுமே இருந்து வருகிறது.
கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கு இடையே சுமார் 6 மீ இடைவெளியாவது இருக்க வேண்டும் என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் பல இடங்களில் பார்த்தால் கடை வாசலில் ஏதோ கோலம் போடுவது போல் வரைந்து வைத்துள்ளனர் அதைப்பார்த்தால் பாண்டி விளையாட்டுக்கு வரைந்தது போல் இருக்கிறதே தவிர சமூக விலக்கலை வலியுறுத்துவதாக இல்லை.
இந்நிலையில் கர்நாடகா போலீஸ் நூதனமான எச்சரிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாகனஹல்லி பகுதியில், “நீங்கள் ரோட்டுக்கு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வரவேண்டியிருக்கும்” என்ற கன்னட மொழி வாசகத்துடன் பொதுமக்களை போலீஸார் எச்சரித்து வருகின்றன்ர்.
கர்நாடகாவில் கரோனா பாதிப்பு 110 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 பேர் புதிதாக கரோனா தொற்றியவர்கள்.. இதுவரை 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் 1,834 கரோனா வைரஸ் தொற்று உள்ளது, இதில் 1649 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 41 பேர் மரணமடைந்துள்ளனர்.