Last Updated : 30 Aug, 2015 10:20 AM

 

Published : 30 Aug 2015 10:20 AM
Last Updated : 30 Aug 2015 10:20 AM

நிலம் கையகப்படுத்த புதிய உத்தரவு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

நிலம் கையகப்படுத்துவது தொடர் பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து, புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது 2013-ம் ஆண்டு நிலம் கையகப் படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சில திருத்தங் களை மேற்கொண்டு பாஜக அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்தது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறினாலும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய பலம் இல்லாததால், நிறை வேறவில்லை. ஆனால், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் 3 முறை கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘‘நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படை யான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடிய மர்த்தல் சட்டம் 2013-ன்படி வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மேலும் 13 மத்திய சட்டங்களின் கீழ் நிலம் கையகப்படுத்தும் போதும் வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்வே சட்டம், ரயில்வே சட்டம், தேசிய நெடுஞ் சாலை சட்டம் உட்பட 13 சட்டங்களின் கீழ் நிலம் கையகப் படுத்தும்போது அவற்றின் உரிமை யாளர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க இந்த அரசாணை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அம்சம், காங்கிரஸ் கொண்டுவந்த நிலம் கையகப் படுத்தும் சட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநிலங்கள் தங்கள் சட்டத்தின்படி நிலங்களை கையகப்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. இந்த உத்தரவின் மூலம் 4-வது முறையாக நிலம் கையகப் படுத்தும் அவசர சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில், ‘‘மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 4-வது முறையாக நிலம் கையகப்படுத் தும் அவசர சட்டம் கொண்டு வரப்படவில்லை’’ என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

தற்போது 4-வது முறையாக அவசர சட்டம் பிறப்பிக்காமல், நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்படும் இழப்பீட்டை 13 சட்டங்களுக்கு விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 13 சட்டங்களின் கீழ் நிலம் கையகப்படுத்தும்போது, அதன் மதிப்பைவிட 4 மடங்கு இழப்பீடு உரிமையாளர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘‘இழப்பீடு விஷயத்தை 13 சட்டங்களுக்கு விரிவுபடுத்த சட்டத் துறை எதிர்ப்பு தெரிவித் துள்ளது. எனினும், மத்திய அரசு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத் துள்ளது. பிஹார் தேர்தல் பிரச்சாரத் தில், பாஜகவின் விவசாயிகள் விரோத போக்கை எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்து வருகின்றன. அதை தடுக்கும் வகையில் பாஜக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தும் செயல். நிலம் கையகப்படுத்தும்போது அதன் உரிமையாளர்கள் நியாயமான இழப்பீடு பெறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதற்காக மத்திய அரசு தவறான வழியில் எடுக்கும் நடவடிக்கைகளைதான் எதிர்க்கிறோம்’’ என்றார்.

மத்திய அரசின் முடிவுக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், நில சட்டத்தின் கீழ் 13 சட்டங்களையும் கொண்டு வருவது அவசர சட்டத்தால் மட்டுமே முடியும் என்று சட்டத் துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x