Published : 01 Apr 2020 07:10 AM
Last Updated : 01 Apr 2020 07:10 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும்- மத்திய அமைச்சர்கள் குழு வலியுறுத்தல்

கரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுபவர்களுக்கு புதிய மருத் துவமனைகளை அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் வெளியே வரலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. காலை முதல் பிற்பகல் 2.30 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குழு

இந்நிலையில், கரோனாவைரஸ் பிரச்சினை தொடர்பாகஅமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது கரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக புதிதாக சிறப்புமருத்துவமனைகள் அமைக்கவேண்டிய அவசியத்தை அமைச் சர்கள் குழு வலியுறுத்தியது.

கரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற புதிய மருத்துவமனைகள் உடனடி யாக அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி யிடம் அறிக்கையை அளிக்கப் போவதாகவும் அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் தொடர்பாக வதந்தியைப் பரப்பு வோர் மீது எப்ஐஆர் பதிவு செய் யப்பட்டு, மிகக் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

விசா விதிகள்

மேலும் விசா விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வுக்கு அண்மையில் பயணித்தவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விசா விதிகளை மீறியோர் கண் டறியப்பட்டு கருப்புப் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படுவர் என்றும் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

1,251 பேர் பாதிப்பு

நேற்று வரை 1,251 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் 32 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. மேலும் 102 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகிவீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அரசு அறிவித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் பரிந்துரை

இதனிடையே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் தொடர்பாக 266 ஐஏஎஸ் அதிகாரிகள் தந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப் படவுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்ற நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அமித் காரே, மத்தியநிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை செயலர் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வைரஸ் அதிகமாக பரவும் இடங்களைக் கண்டறிந்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் சவாலை எதிர்கொள்ளவும் பரிந்துரைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் அளித்துள்ளனர்.

3.2 லட்சம் படுக்கைகள்

இதனிடையே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில்வே பெட்டிகளை மாற்றிய மைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 3.2 லட்சம் படுக்கைகள் தயாராகும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளை மாற்றி சிகிச்சை அளிக்க வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற் கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலங்கள் செய்து வருகின்றன.

தெலங்கானா மாநிலம் செகந் திராபாத்தில் தென் மத்திய ரயில்வே மண்டலம் உள்ளது. அங்கு மொத் தம் 486 ரயில் பெட்டிகளை நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க வசதி யாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது முதல்கட்டமாக 5 ஆயிரம் ரயில்வே பெட்டிகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், சுமார் 80 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.

ஏ.சி. வசதி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ மனை வார்டுகளாக மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு ரயில் பெட்டியில் 16 படுக்கை களைக் கொண்ட வார்டை உரு வாக்க முடியும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆன்-லைனில் யோசனைகளைத் தெரி விக்கலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிகிச்சைஅளிப்பதற்கான தெரபி மற்றும்புதிய சிகிச்சை முறைகளைக்கண்டறிந்து தெரிவிக்கலாம் என்றுஆயுஷ் டாக்டர்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு

இந்நிலையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறும்போது, “நாட்டில் சுமார் 1,200-க்கும் மேற் பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண் டறியப்பட்டுள்ளது. அதேநேரத் தில் நோய் பரவும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகள்அதிகமாகி வருகின்றன. அங்கிருந்துதான் அதிக அளவில் நோய்த்தொற்றுள்ள நபர்கள் வருகிறார்கள்.கடந்த 24 மணிநேரத்தில் 227 பேர்புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மக்களிடையே ஒத்துழைப்பு இல்லாததால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது” என்றார்.

இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ஐசிஎம்ஆர்) சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேற்று வரை 42,788 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று முன்தினம் மட்டும் 4,346 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. அது மட்டுமல்லாமல் தனியார் ஆய்வ கங்களும் இந்த சோதனையைச் செய்து வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x