

ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் எல்லை பாது காப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
எல்லை பாதுகாப்புப் படையின் 104-வது படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மல்காங்கிரி மாவட்டம் ஜன்பாய் முகாம் அருகே நேற்று ரோந்து பணி மேற்கொண்டிருந் தனர். அப்போது அங்கு பதுங்கி யிருந்த மாவோயிஸ்ட்கள் அங்கு புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை வெடிக்கவைத்தும்,. துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். காலை ஏழரை மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்கு தலில் 3 எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இதே படைப் பிரிவைச் சேர்ந்த துணை கமாண்டன்ட் அசோக் குமார் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அசோக் குமாருக்கு ஒரு கண் பறிபோய் விட்டது. அவரும் காயமடைந்த மற்றவர்களும் மல்காங்கிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்த அப்பகுதிக்கு ஏராளமான எல்லை பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஜன்பாய் முகாமிலிருந்து புறப் பட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் படகில் சித்ரகொண்டா ஏரியை தாண்டி சிந்தம் டோலி பள்ளத்தாக்கு பகுதியை அடைந் தனர். அங்கிருந்து குருப்பிரியா பால கட்டுமானப்பணி நடக்கும் இடம் அருகே சென்றபோது கண்ணிவெடி வெடித்தது.
கண்ணிவெடி தாக்குதலுக்குப் பிறகு அங்கே மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் எல்லை பாது காப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதை யடுத்து சுதாரித்துக் கொண்ட பாது காப்புப் படையினர் எதிர் தாக்கு தல் நடத்தினர் என்று சித்ர கொண்டா காவல் நிலைய பொறுப் பாளர் பிதாபஸ் தருவா தெரி வித்தார்.
காயம் அடைந்துள்ள 6 பேரில் 3 பேர் நிலைமை மோசமான நிலையில் உள்ளது. தாக்குதலில் உயிரிழந்த 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உடல் பிரேத பரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.காவல் துறை, எல்லை பாதுகாப்புப்படை மூத்த அதிகாரிகள் மல்காங்கிரி யில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு நடத்தினர்.
மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள் ளார். “கோழைத்தனமான இந்த தாக்குதல்களை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
குற்றம் இழைத்தவர்களை கைது செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று உயிரிழந்த வீரர்களின் குடும்பத் தினருக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.