Published : 31 Mar 2020 07:33 AM
Last Updated : 31 Mar 2020 07:33 AM

கரோனா வைரஸ்: மேலும் 6 பேர் பலியானதாக தெலங்கானா அரசு உறுதி 

தெலங்கானாவில் வெளியே வரும் வாகனதாரிகளை ஏன் எதற்கு என்று விசாரிக்கும் தெலங்கானா போலீஸ்.

கடந்த சில நாட்களில் புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் மதக் கூட்டத்தில் மர்காஸ் பிரார்த்தனைகளுக்காகக் கலந்து கொண்ட 6 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்ததாக தெலங்கானா அரசு திங்களன்று இரவு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

தெலுங்கு மொழியில் தெலங்கானா முதல்வர் அலுவலலகம் நேற்று பின்னிரவு நேரத்தில் வெளியிட்ட செய்தியில் 3 நாட்கள் நடைபெற்ற மதக்கூட்டங்களில் பலர் கலந்து கொண்டதாகவும் இதில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த 6 பேர்களில் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் அடங்குவார்கள். ஒருவர் அப்பல்லோ மருத்துவமனையிலும் மற்றொருவர் குளோபல் மருத்துவமனையிலும் இறந்தனர், மேலும் இருவர் நிஜாமாபாத் மற்றும் காத்வால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று முதல்வர் அலுவலக அறிக்கை கூறுகிறது.

மேலும் கலெக்டர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் இந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

“இவர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மர்காஸ் பிரார்த்தனைகளுக்கு டெல்லி சென்றவர்கள் அரசிடம் தகவல் தெரிவித்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும். ” என்று முதல்வர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

தெலங்கானாவில் மொத்தம் 77 ரிப்போர்ட்டட் கரோனா தொற்றுகளில் 61 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே கரோனா சந்தேக நோயாளி ஒருவர் மாரடைப்பினால் திங்களன்று தெலங்கானா நிஜாமாபாத்தில் மரணிக்க, இவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என்று அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளனர். சமீபத்தில் புதுடெல்லியிலிருந்து வந்த நபர் ஒருவருடன் இந்த இறந்த 62 வயது நோயாளி தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. “அவரது ரத்த மாதிரி சோதனைகளுக்காகக் காத்திருக்கிறோம். இவர் பயத்தில் இறந்திருக்கலாம்” என்று டாக்டர் ஜே.திருப்பதி ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x