Last Updated : 30 Mar, 2020 01:17 PM

 

Published : 30 Mar 2020 01:17 PM
Last Updated : 30 Mar 2020 01:17 PM

வீட்டில் இருக்கும்போது யோகா பண்ணுங்க: பிரதமர் மோடி வெளியிட்ட 3டி வீடியோ

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வான நேரத்தில் யோகா செய்வதற்காக ட்விட்டர் தளத்தில் பிரதமர் மோடி வீடியோ பகிர்ந்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. முதல் வாரத்தை வீடடங்கு உத்தரவு நெருங்குகிறது. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதா்ல் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி நேற்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசினார். அப்போது சிலர் அவருக்கு அனுப்பிய கடிதத்தில் ஓய்வு நேரத்தில் யோகா செய்வது குறித்து வீடியோ பதிவிடலாம் என்று ஆலோசனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் யோகா குறித்த 3டி வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் பதிவி்ட்ட கருத்தில், “ 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் போது சிலர் என்னிடம் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் நான் உடலை எவ்வாறு கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறேன் என்று கேட்டனர். அதற்காக உங்களுக்கு இந்த யோகா வீடியோக்களைப் பகிர்கிறேன். நீங்களும் தொடர்ந்து யோகாவை நாள்தோறும் பயிற்சி செய்வீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமரின் உடல் ஆரோக்கியம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “யோகா மூலமே நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் உடற்பயிற்சி நிபுணர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் யோகா ஆசிரியரும் அல்ல. நானும் யோகா செய்யக்கூடிய ஒருவர். சில ஆசனங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. என்னுடைய இந்த அறிவுரைகள் லாக்-டவுன் நேரத்தில் உங்களுக்கு உதவக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

— Narendra Modi (@narendramodi) March 30, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x