Last Updated : 26 Aug, 2015 08:16 AM

 

Published : 26 Aug 2015 08:16 AM
Last Updated : 26 Aug 2015 08:16 AM

ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் மசோதாக்களை நிறைவேற்ற மழைக்கால கூட்டத் தொடரை மீண்டும் கூட்ட மத்திய அரசு முயற்சி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்தித்து வருகிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் வியாபம், லலித் மோடி விவகாரங்கள் தொடர் பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட தால் அவையில் முக்கிய அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

இதையடுத்து, கூட்டத்தொடரின் நிறைவுநாளில் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலை யில், மீண்டும் மழைக்கால கூட்டத் தொடர் கூட்டப்படலாம் என அறிவித் துள்ள மத்திய அரசு, இதில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரி, அக்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறது. வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை வெங்கய்ய நாயுடு சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக, செய்தியாளர் களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

முக்கிய மசோதாக்களை நிறை வேற்ற மீண்டும் மழைக்கால தொட ரைக் கூட்ட அரசு விரும்புகிறது. தேச நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அனைத்துக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நாடாளு மன்றம் செயல்பட வேண்டும். ஜனநாய கத்தில் ஆரோக்கியமான விவாதத் துக்கு மாற்று எதுவும் இல்லை.

ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட மசோதாக்கள் முக்கியமானவை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தையில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரும் சரிவு ஏற்பட்டுள்ள சூழலில், ஜிஎஸ்டி மசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். உலகம் முழுக்க நிலவும் தற்போதைய நிதிச் சூழலில் இது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மவுனம்

மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாகக் கூறும்போது, “திருத்தங் களை நாங்கள் பார்க்கும் வரையோ அல்லது, அரசுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை என்ன வென்று தெரியும் வரையோ, இறுதிசெய்யப்பட்ட மசோதாவை பார்க்கும் வரையோ இதுதொடர்பாக எவ்வித கருத்தும் கூற முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x