Last Updated : 28 Mar, 2020 02:36 PM

 

Published : 28 Mar 2020 02:36 PM
Last Updated : 28 Mar 2020 02:36 PM

ஏழைகளுக்கு இலவச உணவு:  இந்திரா கேன்டீன்கள் மூலம் வழங்க கர்நாடகா முடிவு

கர்நாடகா அரசு தனது இந்திரா உணவகங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு இலவச உணவு வழங்க முடிவெடுத்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் லாக்-டவுன் நடவடிக்கை எடுத்துள்ளதால் நலிவுற்றோர் ஏழை எளிய மக்கள் உணவுக்கு திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு இலவசமாக உணவை அரசு நடத்தும் அம்மா கேன்டீன் போன்ற கர்நாடகா அரசின் சந்திரா கேன்டீன்கள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது காலை 7.30 மணி முதல் 10 மணி வரை பிறகு 12.30 மணி முதல் 3 மணி வரை பிறௌ 7.30 முதல் இரவு 9 மணி வரை இலவச உணவுப் பொட்டலங்களை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் தெரு வியாபாரிகள், தொழிலாளர்கள், மற்றும் ஏழைகள் இந்த உணவுப்பொட்டலங்களை இலவசமாகப் பெறலாம்.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இதனை அறிவித்தார். இதற்காக அனைத்து தரப்பினரும் உதவ முன் வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

இந்திரா கேன்டீன்கள் தற்போது காலை உணவு ரூ.5க்கும் மதிய உணவு மற்றும் இரவு உணவை ரூ.10க்கும் வழங்கி வருகிறது.

கேன் டீனினில் பணியாற்றுபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் கைகளில் கிளவ்ஸ்களைப் போட்டுக்கொள்வது அவசியம். கேன் டீன்களில் சோப்புகள், சானிட்டைசர்கள் இருப்பதை உறுதி செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கியூவில் நின்று உணவு வாங்குவோர் குறைந்தது 1 மீட்டர் தொலைவில் நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில் கூட்டம் கூடும் என்று கூறி கேன்டீன்கள் கூடாது என்று எடியூரப்பா கூறியிருந்தார், ஆனால் அதற்கு விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தற்போது சுகாதார பாதுகாப்புகளுடன் சந்திரா கேன் டீன்களில் இலவச உணவை ஏழைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x