

கேரளா பாலக்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் ரிமாண்ட் கைதி ஒருவர் மரணமடைந்தார். மதுபானம் என நினைத்து சானிட்டைசரைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.
ராமன்குட்டி என்ற இந்தக் கைதி பிப்ரவரி 18ம் தேதி முதல் ரிமாண்டில் கைதியாக உள்ளார். சிறையில் இவர் திடீரென மயங்கிவிழவே இவரை மருத்துவனமைக்கு அழைத்துச் சென்றனர்.
“சிறையிலேயே தயாரிக்கப்பட்ட சானிட்டைசரை ஆல்கஹால் என நினைதது கைதி குடித்ததாக சந்தேகிக்கிறோம்” என்று மூத்த சிறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிழமை ராமன்குட்டி இயல்பாகவே இருந்துள்ளார், புதனன்று ரோல்-கால் அட்டெண்ட் செய்துள்ளார். ஆனால் 10.30 மணிக்கு மயங்கிச் சரிந்துள்ளார்.
சிறையில் தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பானில் ஐசோபுரொபில் ஆல்கஹால் உள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது, பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே மரணம் எப்படி ஏற்பட்டது என்று தெரியும் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.