ஊரடங்கு எதிரொலி; 2 நாட்களாக தண்ணீர் குடித்து உயிர் வாழும் ஏழைத் தொழிலாளர்கள்: டெல்லியில் அவலநிலை

ஊரடங்கு எதிரொலி; 2 நாட்களாக தண்ணீர் குடித்து உயிர் வாழும் ஏழைத் தொழிலாளர்கள்: டெல்லியில் அவலநிலை
Updated on
2 min read

ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லியில் வசிக்கும் பிஹார் மாநில தொழிலாளர்களும் அவர்களுது குடும்பத்தினரும் அன்றாடம் சாப்பிடுவதற்கே வழியின்றி தவிக்கின்றனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஏராளமான பிஹார் மாநிலத்தைச் சேரந்த தொழிலாளர்கள் தலைநகர் டெல்லியில் தங்கி கூலி வேலைகள் செய்து வருகின்றனர். பதேபூர் பெர்ரி பகுதியில் தங்கியுள்ள 100க்கணக்கான பிஹார் தொழிலாளர்கள் கட்டுமான பணி முதல் கடைகளில் வேலை வரை பல்வேறு பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

இவர்கள் இந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் அன்றாடம் சாப்பிடுவதற்கே வழியின்றி தவிக்கின்றனர்.

சமீமா
சமீமா

இதுகுறித்து பிஹாரைச் சேர்ந்த சமீமா கூறுகையில் ‘‘எங்கள் குழந்தைகள் கடந்த 2 நாட்களாக உணவின்றி தவிக்கின்றனர். 2 நாட்களும் வெறும் தண்ணீரை மட்டும் குடிக்கும் நிலை உள்ளது. ஆனால் நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்காததால் அதன் உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in