Published : 26 Mar 2020 07:31 AM
Last Updated : 26 Mar 2020 07:31 AM

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முகக் கவசம், கிருமி நாசினி வாங்கலாம்: எம்.பி.க்கள் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதியை எந்தெந்தப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் விதிமுறைகள் வகுத்துள்ளது. அதன்படி, தங்கள் தொகுதியில் அத்தியாவசியப் பணிகளை எம்.பி.க்கள் மேற்கொண்டு வரு கின்றனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ‘‘கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. விவேக் தங்கா உட்பட எம்.பி.க்கள் பலர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்று கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியவும், அதை தடுக்கவும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். முகக் கவசங்கள், வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படுத்தும் பரிசோதனைகளை ‘கிட்’ (பை), கிருமி நாசினி, ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகளை வாங்கி தொகுதி மக்களுக்கு விநியோகிக்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்துப் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்.பி.விவேக் தங்கா நன்றி தெரிவித்துள்ளார்.

உ.பி. எம்.பி.க்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியை, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியானவுடன், உத்தர பிரதேச மாநில எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உடனடியாக அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x