

லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயங்குவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினை வெடித்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி எதிர்க்கட்சிகளை இடைநீக்கம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தை நடத்தினார்.
அதுபோல, இப்போது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலா னவர்கள் இல்லாத நிலையில், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியது சரி என்றால் இதுதொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? சுஷ்மா கூறியது சரி என்றால், அவர் விசாரணைக்கு தயாராக இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று விசாரணை முடிவு செய்யட்டும்” என்றார்.