

கேரள மாநிலம் கொல்லத்தில் சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து திரும்பிய ஒருவர், கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தனக்கு குடிக்க டீ வேண்டும் என்று அந்த வார்டில் பணியாற்றும் நர்ஸிடம் அவர் கேட்டுக் கொண்டார். டீ கொண்டுவர தாமதம் ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டவர் ஆத்திர மடைந்தார். தாமதமாகச் சென்ற நர்ஸை அவர் தாக்கினார். அதிர்ச்சியடைந்த நர்ஸ், அளித்தபுகாரின் பேரில் தனிமைப்படுத் தப்பட்டவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல, கடந்த 9-ம் தேதி துபாயில் இருந்து கொல்லத்துக்கு திரும்பிய மற்றொருவர், 14 நாட் கள் சுய தனிமைப்படுத்தல் விதியை மீறி தெருவில் சுற்றியுள்ளார்.
விதிமுறைகளை மீறிய நபர் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர்புகார் அளித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் சமூக சேவகியை கடுமையாக தாக்கினார். பலத்த காயம் காரணமாக சமூக சேவகிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அவரை வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிட்டு கண்காணித்து வருகின்றனர்.