

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இதற்காக அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நேற்று தொடங்கியன. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்றும் பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. அதன்பின்னர் புதன்கிழமை காலை தற்காலிக கோயிலில் சிலைகள் வைக்கப்படும். புதிதாக கட்டப்பட உள்ள ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் வரை சிலைகள் தற்காலிக கோயிலில் இருக்கும். அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பிம்லேந்திர மிஸ்ரா, அனில் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.