

பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மண்டார் எனும் இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் அப்பகுதிவாசிகள் பெரும்பாலும் இளைஞர்கள் அவர்களது வீடுகளுக்கேச் சென்று அடித்து இழுத்து வந்தனர்.
பின்னர் அவர்களை பொது இடத்தில் வைத்து தடி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இச்சம்பவத்தைத் தொட்ர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் மண்டார் பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பெண்களை பில்லி சூனியம் செய்கிறார்கள் எனக் கூறி அடித்துக் கொள்ளும் சம்பவம் ஜார்க்கண்டில் அதிகரித்து வருகிறது. இதுவரை 750 பெண்கள் இதே குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.