Last Updated : 23 Mar, 2020 08:32 AM

 

Published : 23 Mar 2020 08:32 AM
Last Updated : 23 Mar 2020 08:32 AM

கரோனா அச்சம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது?

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நிதிமசோதாக்களை இன்று நிறைவேற்றியபின் முடித்துக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ம் ேததி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கி இருப்பது, எம்.பி.கள் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், எம்.பி.க்களின் பாதுகாப்பு கருதியும் கூட்டத்தொடர் 12 நாட்களுக்கு முன்பே முடிக்கப்படுகிறது .

2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு முதல் அமர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதியுடன் முடிந்தது.அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2 தொடங்கி நடந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, கூட்டத்தொடரை ஒத்திவைக்கக் கோரி பலமுறை எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்குச் சென்று பணிகளை பார்வையிட வேண்டியுள்ளது.

ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லியில் உள்ள தங்களின் கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் மேற்கு வங்கத்துக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளார். அனைவரும் சென்று தொகுதியில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டார்.

இதற்கிடைய சிவசேனா கட்சியும் தங்கள் கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் இனிவரும் கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டார்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதால், டெல்லியிலிருந்து புறப்பட உத்தரவிட்டது.

இதனால் வேறு வழியின்றி இன்று இரு அவைகளும் தொடங்கியவுடன் அடுத்த நிதியாண்டு செலவுக்கான நிதிமசோதாவை மட்டும் நிறைவேற்றிவிட்டு அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்ட நிலையில் 12 நாட்களுக்கு முன்பாகவே முடிக்கப்பட உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x