நிர்பயா வழக்கில் நீதி கிடைத்து விட்டது சரி... நிர்பயா நிதியை யுபிஏ உருவாக்கியதே அது என்னாயிற்று?- காங். கேள்வி

நிர்பயா வழக்கில் நீதி கிடைத்து விட்டது சரி... நிர்பயா நிதியை யுபிஏ உருவாக்கியதே அது என்னாயிற்று?- காங். கேள்வி
Updated on
1 min read

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர், நீதி கிடைத்து விட்டது.. சரி, ஆனால் இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் நம் அமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன, பெண்கள் பாதுகாப்புக்கென்றே உருவாக்கப்பட்ட நிர்பயா நிதி என்ன ஆனது, அதைப் பயன்படுத்தவே இல்லை என்று காங்கிரஸ் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்தது.

“நீதி தாமதமானது, நமக்கு சட்டங்களில் சீர்த்திருத்தங்கள் தேவை, நிர்பயா குடும்பத்தினர் தனியாகப் போராடினர். நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று ஒன்றை உருவாக்கி ரூ.100 கோடியை ஒதுக்கியது. 7 ஆண்டுகள் ஆகியும் அந்த நிதி பெண்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டதா என்ற விவரங்கள் எதுவும் இல்லை. தேசிய குற்றப்பதிவு ஆணையத் தகவல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் 34,000 பலாத்காரங்கள் நிகழ்கின்றன, ஆனால் 25 முதல் 27% தான் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுகின்றனர்.

நீதித்துறை சீர்த்திருத்தஙள் பற்றியும் மத்திய அரசு பேச வேண்டும், உன்னாவில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் ஆனால் அரசு மவுனம் காத்து வருகிறது. எந்த ஒரு ஆளும் கட்சி எம்.பியும் அதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆமி யாக்னிக் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in