

காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு போலீஸ் உட்பட 2 பேர் பலியாயினர்.
பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் சுல்தான்-உல்-அரிபின் மக்தூம் மசூதி உள்ளது. இதன் பாதுகாப்புக்காக அமைக்கப்பட் டுள்ள காவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பயாஸ் அகமது படுகாயமடைந்தார். இதையடுத்து சோபோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலியானார். இதுதவிர அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பலியானார்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி கள், போலீஸ் கான்ஸ்டபிளிடமி ருந்த ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக் கியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பாதுகாப்புப் படை யினர் தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.