Published : 18 Mar 2020 07:02 AM
Last Updated : 18 Mar 2020 07:02 AM

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது; இந்தியாவில் இதுவரை 142 பேருக்கு பாதிப்பு: உயிரிழப்பு 3 ஆக உயர்வு- மருத்துவ கண்காணிப்பில் 54,000 பேர்; ஈரானில் 254 இந்தியர்களுக்கு காய்ச்சல்

கோவிட் -19 வைரஸ் பரவல் பீதியால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுச்சேரி கடற்கரை சாலைப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுடெல்லி

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையை சேர்ந்த 64 வயது பெண் இந்த காய்ச்சலால் நேற்று உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 40 பேர் குழு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துபாய் சென்றுள்ளது. அந்த குழுவினர் கடந்த மார்ச் 1-ம் தேதி மும்பை திரும்பியுள்ளனர். இதன்பிறகு அவர்கள் மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்கள், கர்நாடகாவின் பெலகாவி பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்த குழுவை சேர்ந்த 15 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழுவின் இதர உறுப்பினர்கள் தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர். இந்த குழுவினரின் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் மகா ராஷ்டிராவில் காய்ச்சலால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் சென்ற குழுவை சேர்ந்த 64 வயது பெண், வைரஸ் காய்ச்சல் கார ணமாக மும்பையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று உயிரிழந்தார். கர்நாடகா, டெல்லியை சேர்ந்த தலா ஒருவர் ஏற் கெனவே உயிரிழந்துள்ளனர். அவர் களையும் சேர்த்து உயிரிழப்பு எண் ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா 41, கேரளா 26, ஹரி யாணா 15, உத்தர பிரதேசம் 15, கர்நாடகா 11, டெல்லி 10, ராஜஸ்தான் 4, தெலங்கானா 5, லடாக் 6, காஷ்மீர் 3, பஞ்சாப், ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, உத்தராகண்ட், ஒடிசா வில் தலா ஒருவர் என 142 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள னர். இதில் 24 பேர் வெளிநாட்டினர்.

54,000 பேருக்கு கண்காணிப்பு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநிலங்களவையில் நேற்று கூறும்போது, "கிராமங்கள், நகரங்களில் பணியாற்றும் அரசு, தனியார் மருத் துவர்கள் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் 72 ஆய்வகங்களில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை கண்டறி வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 49 ஆய்வகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆய்வக கவுன்சில் பொது இயக்குநர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரி களுக்கு ஏற்கெனவே விடுமுறை விடப்பட் டுள்ளது. மால்கள், திரையரங்குகள் மூடப் பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலர்கள் பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் 1,570 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

ரயில் நிலைய பிளாட்பாரங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி தாஜ் மஹால் நேற்று மூடப்பட்டது. இதேபோல நாடு முழுவதும் உள்ள பிரபல சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ஷீரடி சாய்பாபா கோயில், மும்பை சித்திவிநாயகர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங் களும் மூடப்பட்டுள்ளன.

ஈரானில் கோவிட்-19 வைரஸ் காய்ச் சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் 16,169 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 988 பேர் உயி ரிழந்துள்ளனர். ஈரானில் சுமார் 6,000 இந்தியர்கள் உள்ளனர். இதில் 389 பேர் அண்மையில் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். இதர இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் 254 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை நேற்று உறுதி செய்தது.

7,415 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் 1,83,055 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இதுவரை 7,415 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக சீனாவில் 3226, இத்தாலியில் 2158, ஈரானில் 988, ஸ்பெயினில் 491 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல்

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உட்பட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கியமான சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ, மயிலாப்பூர் சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, அம்பா ஸ்கைவாக், விஆர் மால், விஜயா போரம், பீனிக்ஸ் மால் போன்ற பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோயில் உட்பட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 43 பாரம்பரிய கலைச்சின்ன வளாகங்கள் மூடப்பட்டன.

கன்னியாகுமரி

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜ்களையும் வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு எவ்வித முன்பதிவும் செய்யக்கூடாது’ என லாட்ஜ் உரிமையாளர்களிடம், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் அறிவுறுத்தினார்.

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ரத்து செய்து உத்தரவிட்டார். கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, வாசலூர்பட்டி படகு இல்லம் ஆகியவற்றை மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட வன அலுவலர் காஞ்சனா உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான மனோரா, கல்லணை, தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், ஆயுத கோபுரம், தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மணி கோபுரம், மராட்டா தர்பார் ஹால் ஆகியவை மூடப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொது சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x