Last Updated : 17 Mar, 2020 04:49 PM

 

Published : 17 Mar 2020 04:49 PM
Last Updated : 17 Mar 2020 04:49 PM

மேற்கு வங்கத்தைத் தவிர பிரதமரின் விவசாயிகள் திட்டம் மற்ற மாநிலங்களில் அமலாகியுள்ளது: மக்களவையில் தகவல்

பிரதமர் கிசான் சம்மான்நிதி யோஜனா என்ற விவசாயிகள் நலத்திட்டம் மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி நாடு முழுதும் பிரதமரின் கிசான் திட்டம் பல மாநிலங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார், “இதுவரை, மார்ச் 11, 2020 முடிய பிரதமரின் இந்தத் திட்டம் 8 கோடியே 69 லட்சத்து, 79 ஆயிரத்து 391 பயனாளர்களுக்காக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால் இதில் 69 லட்சம் மேற்கு வங்க விவசாயிகள் அடங்கவில்லை என்ற அவர் மேற்கு வங்கம் இந்தத் திட்டத்தில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்றார்.

இதற்காக தகுதியுடைய விவசாயிகள் மற்றும் குடும்பத்தினரை அடையாளம் காணும் பொறுப்பு மாநில மற்றும் யூனியம் பிரதேச அரசுகளிடம் இருக்கிறது என்று அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார். மாநில அரசுகள் பிரதமர் கிசான் திட்டத்துக்காக விவசாயிகள் குறித்த சரியான தகவல்களை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் இதற்கான விவரங்களை மிக வேகமாக பதிவேற்றம் செய்யவும் இதற்காக முகாம்களை நடத்தவும் பணிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்காக மாநில அரசுகள் மற்றும் இதில் தொடர்புடையவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாராந்திர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தகுதியுடைய ஒவ்வொரு விவசாயிக்கும் இந்தத் திட்டம் சென்றடையச் செய்து இதில் 100% இலக்கை எட்டுவதுதான் அரசின் குறிக்கோள், இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றார் மத்திய அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x