Published : 17 Mar 2020 04:35 PM
Last Updated : 17 Mar 2020 04:35 PM

கரோனா முன்னெச்சரிக்கை: சினிமா, கொண்டாட்டங்கள் இல்லை; குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் மக்கள்

கரோனா முன்னெச்சரிக்கையால் உலகம் முழுவதுமே மக்கள் வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவது அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதுமே பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலரும் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்யும் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி கரோனா பீதி காரணமாக பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுக்கும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அனைவரும் வீடுகளில் தங்கி இருக்கும் சூழல் உள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து போர்ட்டிஸ் நிறுவன மனநல மருத்துத்துறை தலைவர் சமீர் பரேக் கூறுகையில் ‘‘கரோனா பீதி காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டம், இரவு தாமதமாக வீடுகளுக்கு வருவது, வெளியிடங்களில் உணவு உண்பது போன்ற எந்த தேவையும் இல்லாமல் போய் விட்டது.

நேரத்திற்கு தூங்கி, வீட்டு உணவை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைவிட வீட்டில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவது அதிகரித்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கையால் இதுபோன்ற நேர்மறையான சூழலும் உருவாகியுள்ளது’’ எனக் கூறினார்.

இதுகுறித்து மற்றொரு மருத்துவர் மணிஷ் ஜெயின் கூறுகையில் ‘‘எச்சரிக்கைக்கும், பீதிக்கும் குறைந்த இடைவெளி தான் உள்ளது. எச்சரிக்கை என்பது தேவை. அதுவே பீதியடைந்தால் அது ஒவ்வொருவருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும். ஒவ்வொருவரது உடலிலும் இது பிரச்சினையாக கூடும். எனவே இந்த விஷயத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சமூகவலைதளங்களில் ஒவ்வொருவரும் வெளியிடும் தகவல்களை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x