

முகநூலில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி ஆட்சேபணைக்குரிய விதத்தில் நிலைத்தகவல் பதிவு செய்த 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பிடிஐ-யிடம் போலீஸார் தரப்பு கூறும்போது, முகத்தர் பஹல்வான் என்ற நபர் உள்ளூர் நீதிமன்றத்தினால் சிறைக்கு அனுப்பப் பட்டார் என்றார்.
“இந்த நபர் மீது பஜ்ரங்தள் உறுப்பினர் ஒருவர் புகார் பதிவு செய்தார். இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 20ம் தேதி வர்த்தகர் ஒருவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த எதிர்மறைப் பதிவு ஒன்றை பகிர்ந்ததாகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் கடந்த ஜூன் 19ம் தேதி இதே போல் யோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு பதிவு மேற்கொண்டதாக இரண்டு பேர் உ.பி.யில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக தனியார் டிவி சேனல் எடிட்டர், நிருபர் உட்பட 3 பேர் இதே காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.