

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா. இவர் மீது பாலியல் புகார், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.
அடுத்தடுத்த வழக்குகள் காரணமாக நித்யானந்தா வெளிநாட்டுக்குச் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அவர் ஈக்வெடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நித்யானந்தா கூறியதாவது: கோவிட்-19 வைரஸால் நாங்கள் பாதிக்கப்பட்டவில்லை.
இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால், பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்குப் பாதுகாவலனாக உள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். மேலும் கைலாசாவின் பிரதமர் நித்யானந்தா பரமசிவம் என்றும் தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்.