கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மூடல்: வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மூடல்: வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு
Updated on
2 min read

கர்நாடகாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்கு கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நகர மாக விளங்கும் பெங்களூருவில் 5 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு முதலில் உயிரிழந்தவர் கர் நாடகாவை சேர்ந்த 76 வயது முதி யவர் ஆவார். இதனால் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியானதால் மக்கள்பீதி அடைந்துள்ளனர்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:

மழலையர், தொடக்கப் பள்ளிமாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல கல்லூரிகளுக்கும் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு கள் மட்டும் ஏற்கெனவே அறி விக்கப்பட்டபடி நடைபெறும்.

கர்நாடகாவில் உள்ள திரை யரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை, மதுபான விடுதிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு மூடப்படும். இதேபோல அனைத்து பூங்காக்கள், சமுதாய பொழுது போக்கு மையங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையங்களும் மூடப்படும். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பொது நிகழ்ச்சி கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் சுற்றுலா செல் வதையும், பயணங்கள் மேற்கொள் வதையும் தவிர்க்க வேண்டும். ஏற் கெனவே தேதி முடிவு செய்யப்பட்ட திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக் களில்கூட 500, 1000 பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப விழாக்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்க வேண்டாம். தனியார் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய ஊழியர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

இதனால் கர்நாடகா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் நேற்று மூடப் பட்டன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்கு கள், கேளிக்கை, மதுபான விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. கூகுள், இன்போசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பன்னாட்டு நிறு வனங்களும் அனைத்து ஊழியர் களையும் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள் ளன. இதனால் பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் குறைந்து, நக ரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல மைசூரு, மங்க ளூரு, ஹூப்ளி உள்ளிட்ட இடங் களிலும் அனைத்து வணிக வளா கங்கள், திரையரங்குகள், மதுபான விடுதிகளும் மூடப்பட்டன. பெரிய உணவு விடுதிகள், சாலையோர உணவுக் கடைகள், காய், பழம், இறைச்சி விற்பதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கொல்லூர் மூகாம்பிகை, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத் துள்ளது. கோவிட்-19 வைரஸ் பீதியால் மக்கள் வெளியே வராமல்வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனால் கர்நாடகாவில் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கி உள்ள தால் கர்நாடக அரசு தனது உத் தரவை திரும்ப பெற வேண்டும் என் றும், திருமணம் உள்ளிட்ட விழாக் களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in