உ.பி. லக்னோ சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை: 28 பேர் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

உ.பி. லக்னோ சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை: 28 பேர் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
Updated on
1 min read

கடந்த டிசம்பர் 19ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேர் மீது உ.பி.அரசு குண்டர்கள் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்துள்ளது.

போராட்டத்தின் போது சத்கந்த போலீஸ் நிலையத்திற்குத் தீவைத்து கடமையில் இருந்த போலீசாரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டதாக லக்னோ போலீஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்ட இந்த 28 பேர்களும் பொதுச்சொத்து, தனிச்சொத்துக்களை சூறையாடியதாகவும், போலீஸார் உடைமைகளை கொள்ளையடித்ததாகவும் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் போலீஸ் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக ‘திட்டமிட்டு’ இந்த 28 பேர்களும் ஒரு குழுவாகச் செயல்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in