

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் வருவாய் கடந்த 11 மாதங்களில் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிந்தியாவின் வருவாய் அதிகரித்திருப்பதாக அவரது வருமானவரிக் கணக்குத் தாக்கல் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு குணா லோக்சபா தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் மற்றும் இந்த ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் வேட்பாளராக மனு செய்த போது தாக்கல் செய்த சொத்து விவரங்களும் அவரது வருவாய் 11 மாதங்களில் எகிறியிருப்பதைக் காட்டியுள்ளது.
ராஜ்யசபா வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களின்படி சிந்தியா ரூ.1 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 100 வருவாய் ஈட்டியுள்ளார். இவரது மனைவி பிரியதர்ஷினி சிந்தியா ரூ.475, 240-ம், மகன் மகாநாராயமனா சிந்தியா ரூ207,510-ம் ஆண்டில் வருவாய் ஈட்டியுள்ளனர்.
சிந்தியாவின் அசையும் சொத்துக்கள் 2019-லிருந்து சுமார் ரூ.25,92,000 அதிகரித்துள்ளது. மொத்த நகரும் சொத்துக்கள் 3 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 9000 ஆகும்.
தாக்கல் செய்த மனுவில் பரம்பரை சொத்து என்று ரூ.45.34 கோடி காட்டியுள்ளார். மொத்தமாக அவரது அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ.2.97 பில்லியன்களாகும். மேலும் பரம்பரை சொத்தாக அவருக்கு விவசாய நிலம் ரூ.1.81 கோடி மதிப்பில் உள்ளது.
சிந்தியா வங்கியில் ரூ.3 கோடியே 2 லட்சத்து 28, 252 டெபாசிட் செய்துள்ளார், மனைவி ரூ.662,492.50 டெபாசிட் செய்துள்ளார். மகன் ரூ.12,14,622-ம் மகள் ரூ.2,29, 114-ம் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர்.
தன்னுடைய தேர்தல் வேட்பு மனுவுடன் சமர்ப்பித்த சொத்து விவரங்களில் அவர் கைவசம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 12 கொடியே 67 லட்சத்து 5 ஆயிரத்து 183 ஆகும். வெள்ளியின் மதிப்பு சுமார் ரூ.16 கோடியே 34 லட்சத்து, 94 ஆயிரத்து 692 ஆகும். இவையெல்லாம் பரம்பரை நகைகள்.
இது தவிர மும்பையில் சமுத்ர மஹாலில் ரூ.31 கோடி மதிப்புள்ள 2 குடியிருப்புகள் இவருக்கு சொந்தமானவை.
இது போக குவாலியரில் ரூ.1.80 பில்லியன் மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ஆடம்பர ஜெய் விலாஸ் பேலஸில் வைத்துள்ளார். ராணி மஹால், ஹிரண்வான் கோதி, ராக்கெட் கோர்ட், சாந்திநிகேதன், சோட்டி விஷ்ராந்தி, விஜய் பவன் மற்றும் பிற உள்ளிட்ட சுமார் ஒரு டஜன் சொத்துக்களுக்குச் சொந்தமானவர் சிந்தியா. இந்த நிலையான சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.2.97 பில்லியன்களாகும்.