

மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி காரணமாக ஆட்சியைத் தக்க வைக்க எண் விளையாட்டில் இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சி. மாநில காங்கிரஸ் ஆட்சியின் விதி ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்கள் கையில் இருக்கிறது. இவர்கள் நினைத்தால் காங்கிரஸ் அரசைக் காப்பாற்றலாம் அல்லது கவிழ்க்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக கமல்நாத் அரசு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 22 எம்.எல்.ஏ.க்கள் இதற்குக் காரணம், இதில் 19 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ளனர், இதில் 13 பேருக்கு ம.பி. சபாநாயகர் என்.பிரஜாபதி சட்டப்பேரவைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பினார், ஆனால் அவர்கள் வரவில்லை.
இந்நிலையில் முன்னாள் முதன்மைச் செயலர் பகவான் தாஸ் இஸ்ரனி ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ம.பி. மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் அமர்வு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது, ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவைத்தலைவர் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபைக்கு வருமாறு வாய்ப்பு வழங்கினார். இந்நிலையில் காங்கிரஸ் அழைப்பை எம்.எல்.ஏ.க்கள் மறுத்தால் அவர்கள் தங்கள் உறுப்பினர் அந்தஸ்தை இழக்க நேரிடும், என்றார்.
230 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 காலியாக உள்ளது, ஆகவே மொத்தம் 228 எம்.எல்.ஏ.க்களில் 114 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 107 பாஜக உறுப்பினர்கள். பகுஜன் 2, சமாஜ்வாதி 1, சுயேட்சைகள் 4. என்ற நிலை உள்ளது. 22 காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர் இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 92 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளின் ஆதரவையும் சுயேச்சைகளையும் சேர்த்தால் கூட 99 இடங்கள்தான் உள்ளது.
போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கழித்து விட்டால் சட்டப்பேரவையில் மொத்தம் 206 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சியத் தக்கவைக்க 104 வேண்டும். பாஜகவிடம் 107 உள்ளது. காங்கிரஸ் கட்சி 5 உறுப்பினர்களைக் குறைவாகக் கொண்டுள்ளது.
அரசியல் வல்லுநர்களின் கருத்தின் படி வெளியேரிய 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்லனர், 3 பேர் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் வருவது கடினம். இந்நிலையில் ராஜ்யசபாவில் 2வது காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி சாத்தியமில்லை. காரணம் பாஜகவுக்கு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளாது.
இந்த நெருக்கடிக்கு முழுக்க முழுக்க பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாதான் காரணம். 18 ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து விட்டு தற்போது பாஜகவில் சேர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்னொரு புறம் எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பாஜக குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க சதி செய்வதாக முதல்வர் கமல்நாத் கவர்னர் லால்ஜி டேண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 6 அமைச்சர்கள் தங்கள் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.