

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் பெங்களூருவில் உள்ள தனியார்மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 11-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவர் இறந்த பிறகே ரத்த மாதிரி பரிசோதனை முடிவு கிடைத்தது. இதில் அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அவர் மூலம் 69 வயதான அவ
ரது தாயாருக்கும் இந்த காய்ச்சல் பரவியது.
இருவரும் டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 69 வயதான தாய் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் செங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் கோவிட்-19
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் அண்டை வீட்டுக்காரர் ஆவார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது ரத்த மாதிரிகள்ஏற்கெனவே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் தெரிந்த பிறகே அவர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும்.