Last Updated : 13 Mar, 2020 11:07 AM

 

Published : 13 Mar 2020 11:07 AM
Last Updated : 13 Mar 2020 11:07 AM

என்பிஆருக்கு என்ஆர்சி அடிப்படை என்றால் குடியுரிமை திருத்தச் சட்டம் 2003 விதிகளையே திருத்த வேண்டும்: யெச்சூரி கோரிக்கை

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. | கோப்புப் படம்

புதுடெல்லி

தேசிய குடியுரிமை பதிவு (என்.ஆர்சி) தேசிய குடிமக்களின் பதிவுக்கு (என்பிஆர்) அடிப்படையாக இருக்கும் என்று அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதால், குடியுரிமை திருத்தச் சட்டம், 2003 விதிகளையே மத்திய அரசு திருத்த வேண்டும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத் தவர், கிறிஸ் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத் தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர் களுக்கு இந்தியக் குடியுரிமை வழங் கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் குடியேறி யவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனிநபர்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் பிற விவரங்களை சேகரிக்கும் பணியாளர்களைக் ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக என்பிஆர் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனை யொட்டி நேற்று உள்துறை அமித்ஷா கூறுகையில், இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பயிற்சியின் போது எந்தவொரு குடிமகனும் ‘டி’ அல்லது ‘சந்தேகத்திற்குரியவர்’ என்று குறிக்கப்படமாட்டார் என்றும் குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களும் வழங்கப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

இதுகுறித்து சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது தொடர்ச்சியான ட்வீட்களில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் குடியுரிமை அதன் குடிமக்களின் இனம், சாதி, மதம், நம்பிக்கை, பாலினம், பகுதி அல்லது தொழில் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை. இச்சட்டத்தின்மூலம் இந்தியாவையோ அதன் ஆன்மாவையோ உடைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் அனுமதிக்க முடியாது.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2003 இன் விதிகள், என்.ஆர்.சிக்கு பதிலாக என்.பி.ஆர்யின் அடிப்படையில் இருக்கும் என்று தெளிவாகக் கூறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் 2003 விதிகளை அரசாங்கம் திருத்தி இணைப்பை உடைக்க வேண்டும்.

“அமித் ஷா‘ காலவரிசையை ’ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, ஆனால் மூன்று முறை தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளார். இப்போது, ​ இதுபோன்ற கருத்துக்கள் இந்தியர்களை தவறாக வழிநடத்துகின்றன.

"என்பிஆருக்கு சட்டரீதியான அடிப்படை இல்லை. இது என்.ஆர்.சிக்கு வசதியாக 2003 திருத்தத்தின் விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்பிஆருக்கு என்ஆர்சி அடிப்படை என்றால் குடியுரிமை திருத்தச் சட்டம் 2003 விதிகளையே திருத்த வேண்டும்

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x