

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் கள்ளச் சந்தையில் விற்பதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 13 பேர் அடங்கிய கும்பலை கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இவர்களிடமிருந்த லட்டு டோக்கன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பக்தர்கள் என்ற போர்வையில் வெவ்வேறு பெயர்களில் லட்டு டோக்கன்களை பெற்று, அதை அதிக விலைக்கு விற்று வருவது விசாரணையில் தெரியவந்தது.
ரூ. 25 வீதம் ஒரு லட்டை வாங்கி அதை ரூ. 50 மற்றும் அதற்கும் அதிகமான விலைக்கு விற்று வருகின்றனர்.