

புதுடெல்லி: உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள சந்த் பாக் பகுதியில் கடந்த மாதம் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூசைனை கட்சி மேலிடம் நீக்கியது. அதன்பின், 3 நாட்களுக்கு முன்னர் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், அங்கித் ஷர்மா கொலையில் சல்மான் என்ற மேலும் ஒருவர் தற்போது சிக்கியுள்ளார். டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். - பிடிஐ