

வாராக்கடன் மற்றும் நிதி நெருக்கடியினால் திவாலான யெஸ் வங்கியில் இமாச்சல பிரதேசப் பணம் 1900 கோடி சிக்கியுள்ளது முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
வாராக்கடன் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சினையில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் தன் வசம் எடுத்துக்கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
முதல்கட்ட விசாரணையில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லண்டனில் முதலீடு செய்துள்ளதும், அரசியல்வாதிகளிடம் இருந்து வாங்கப்பட்ட 44 விலை உயர்ந்த ஓவியங்கள்,20- க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடும் ட்விட்டர் தளத்தில் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டன.
ராணா கபூர் வீட்டில் 48 விலை உயர்ந்த ஓவியங்கள் இருந்தன. இந்த ஓவியங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கையை, நட்பை பெறுவதற்காக அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் யெஸ் வங்கியில் மாநில அரசு முதலீடு செய்ததாக இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் பட்ஜெட் அமர்விற்குப் பிறாக கேள்வி நேரத்தில் முதல்வர் இன்று கூறியுள்ளதாவது:
யெஸ் வங்கியில் இமாச்சலப் பிரதேச அரசுப் பணமும் மற்றும் மாநில மக்களின் பணமும் ரூ .1,900 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இதில் பல அரசு நிறுவனங்கள் மற்றும் சாதாரண மக்கள் டெபாசிட் செய்த பணமும் அடங்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.