

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ‘காங்கிரஸ் கட்சி முன்பு போன்று இல்லை’ என்று கூறியதோடு நாடு இப்போது பிரதமர் மோடியின் தலைமையில் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.
“தேசத்துக்குச் சேவையாற்ற சிறந்த நடைமேடை (பாஜக) எனக்குக் கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன். பிரதமருக்கு நன்றி. பிரதமர் மோடியைத் தவிர வேறு எந்த அரசும் இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி வெற்றி பெற்றதில்லை. ஒருமுறை அல்ல இருமுறை. மக்களின் இந்த நம்பிக்கையை நேர்மறையான செயல்பாட்டு முறையுடன் பிரதமர் பணியாற்றும் விதம், இந்தியாவுக்கு அவர் ஏற்படுத்தியிருக்கும் பன்னாட்டு மரியாதை, திட்டங்களை செயல்படுத்திய விதம், நான் நினைக்கிறேன் நாடு பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக” என்றார் சிந்தியா.
“என்னுடைய முந்தைய கட்சியில் மக்களுக்கு என்னால் சேவையாற்ற முடியவில்லையே என்று விரக்தியில் நொந்து போனேன், மக்களுக்கு சேவையாற்றுவதே என் குறிக்கோள் அதற்கு அரசியல் ஒரு வழிமுறை அவ்வளவே. காங்கிரஸ் மூலம் இந்த குறிக்கோளை நான் எட்ட முடியாது.
மத்தியப் பிரதேசத்துக்கான எங்களது கனவுக்ள் 18 மாதங்களில் சிதிலமடைந்து விட்டது” என்றார் சிந்தியா.