ஈரானிலிருந்து 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஈரானிலிருந்து நேற்று இந்திய விமானப் படை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் உ.பி-யின் ஹிண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
ஈரானிலிருந்து நேற்று இந்திய விமானப் படை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் உ.பி-யின் ஹிண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
Updated on
1 min read

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப் பட்ட ஈரானிலிருந்து 58 இந்தியர்கள் நேற்று தாயகம் வந்து சேர்ந்தனர்.

ஈரானில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இருப் பார்கள் என கருதப்படுகிறது.

அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானம் நேற்றுமுன் தினம் ஈரான் புறப்பட்டது.

அந்த விமானம், 58 இந்தியர் களுடன் நேற்று காலை இந்தியா திரும்பியது.

இதுகுறித்து இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது ட்விட்டர் பதிவில் “ சவா லான நேரத்தில் பணியாற்றிய ஈரா னில் உள்ள இந்திய தூதரகம் மற் றும் மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். இந்திய விமானப்படைக் கும் நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி 76 இந்தியர்களை வூஹான் நகரிலி ருந்து இந்திய விமானப்படை விமானம் டெல்லிக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in