Published : 11 Mar 2020 07:06 AM
Last Updated : 11 Mar 2020 07:06 AM

நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60-ஆக உயர்வு; சபரிமலை வருவதைத் தவிர்க்க வேண்டும்: பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவஸம் நிர்வாகம் அறிவுறுத்தல்

இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என தேவஸம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரிலிருந்து பரவத்தொடங் கிய கோவிட்-19 வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி பலர் உயி ரிழந்துள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை இந்த வைரஸால் 45 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நூற்றுக் கும் மேற்பட்டோருக்கு அறிகுறி காணப் பட்டது. இந்நிலையில் நேற்று நிலவரப் படி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 2 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 5 பேரும், கேரளாவில் 14 பேரும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 3,200 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 60 பேருக்கு மட்டுமே கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலை யங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்கவும், சுகாதாரத்தை மேம் படுத்தவும் மத்திய அரசு, மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து மாநில அரசுகள் சார்பில் கூடுதல் ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநில அரசுகள் தங்களது எல்லை களை சீல் வைத்துள்ளது.

இதற்கிடையே கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கர்நாடகாவில்சிறுவர்களுக்கான பள்ளி கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆரம்ப பள்ளிகளில் தேர்வுகளை உடனடியாக முடித்து விட்டு விடுமுறை அளிக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற் கெனவே பெரும்பாலான பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் 14 பேருக்கு இக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

காலவரையற்ற விடுமுறை

இந்நிலையில் மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வருவதை முறைப்படுத்த கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆன்லைன் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தேக்கடி, மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணை, ராஜமலை, குண் டலை, ஆத்துக்காடு, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பொதுக்கூட்டங் களைத் தவிர்க்கவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மூணாறு உள் ளிட்ட கேரளாவின் அனைத்து பகுதி களிலும் இன்று முதல் (புதன்) மழலையர் பள்ளி முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவர் களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 13-ம் தேதி மாதாந்திர பூஜைக்கு நடை திறக்கப்பட உள்ளது. வரும் 18-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும். இருப்பினும் பக்தர்கள் வருவதற்கு திருவாங்கூர் தேவஸம் நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் கோவிட்-19 காய்ச்சல் அச் சுறுத்தலுடன் தற்போது கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச் சலும் பரவி வருகிறது.

எனவே கேரள நுழைவு வாயிலான தமிழகத்தைச் சேர்ந்த லோயர்கேம்ப், முந்தல், கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர், கால்நடைத் துறையினர் இணைந்து முகாம் அமைத்து சோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முந்தலில் ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் இப்பணி நேற்று நடைபெற்றது. கேரளா வில் இருந்து வரும் வாகனங்களில் ஆக்டிவேட்டட் 5 எனும் கிருமி நாசினி கரைசல் தெளிக்கப்படுகிறது.

தியேட்டர்கள் மூடல்

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களை வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் வேண்டுகோளையடுத்து இந்த முடிவை தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கோவிட்-19 வைரஸ் பரவியுள்ள 12 மாநிலங்களிலும் முக கவசங்கள், கையுறைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிக அளவு இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் புஜியான் மாகாணம் லிச்செங் மாவட்டம் குவான்ஜு நகரில் கோவிட்-19 வைர ஸால் பாதிக்கப்பட்ட சிலர் ஒரு தனிமை வார்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கட்டிடம் கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் நேற்று வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கோவிட்-19 வைரஸ் பரவிய சீனாவின் வூஹான் நகருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன்முறையாக நேற்று வருகை தந்து ஆய்வு நடத்தினார். அங்குள்ள நோயாளிகள், டாக்டர்களிடையே ஜி ஜின்பிங் உரையாற்றினார். இந்த நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சீனாவில் மட்டும் 3,136 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் மட்டும் 291 பேர் கோவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x