Published : 10 Mar 2020 03:49 PM
Last Updated : 10 Mar 2020 03:49 PM

ம.பி.யில் 6 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை

மத்திய பிரதேச அமைச்சர்கள் 6 பேரை பதவியில் இருந்து நீக்குமாறு ஆளுநருக்கு அம்மாநில முதல்வர் கமல்நாத் பரிந்துரைத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி 107 எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தது.

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர். அவர்கள் பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் சில அமைச்சர்களை பதவி விலகச் செய்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்தது.

இதற்கு ஏதுவாக அம்மாநிலத்தில் 19 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராவத் தெரிவித்தார். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் சமரசம் ஏற்படும் என தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழலில் ஜோதிராதித்ய சந்தியா வீட்டில் இருந்து கிளம்பினார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க செல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார்.

பின்னர் ஜோதிராதித்ய சந்தியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. இதனால் ம.பி. காங்கிரஸ் அரசு ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார். ஜோதிராதித்ய சி்நதியாவின் ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர்கள் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்தநிலையில் மத்திய பிரதேச அமைச்சர்கள் 6 பேரை பதவியில் இருந்து நீக்குமாறு ஆளுநருக்கு அம்மாநில முதல்வர் கமல்நாத் பரிந்துரைத்துள்ளார்.

இம்ராதி தேவி, துல்சி சிலாவத், கோவிந்த் சிங் ரஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, பிரத்யுமன் சிங் தோமர், பிரபுராம் சவுதாரி ஆகிய ஐந்து பேரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் கமல்நாத் பரிந்துரைத்துள்ளார். இதுதொடர்பாக ம.பி. ஆளுநருக்கு கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.

இவர்கள் 6 பேரும் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x